Skip to main content

kuttram199

                

குற்றம்199

பகுதி-2

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்கள் அனைவரும்  பயத்தில் மூழ்கி இருந்தனர். அறையில் இருந்த இரு காவலர்களுள் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாறன்  மற்றோருவர் கான்ஸ்டபிள் சேது. இன்ஸ்பெக்டர் உடனே ஆம்புலன்சை வரச் சொல்ல சேதுவிடம் சொன்னார்.

இன்ஸ்பெக்டர்  உடனே போரென்சிக் டிபார்ட்மென்ட்குத் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லி உடனடியாக வர சொன்னார். போரென்சிக் டிபார்ட்மென்ட் நிபுணர்கள் வந்ததும் அறையை ஆய்வு செய்ய சொன்னார் இன்ஸ்பெக்டர்.

போரென்சிக் டிபார்ட்மென்ட் அறை முழுவதும் ஆய்வு  மேற்கொண்ட நிலையில் இன்ஸ்பெக்டர் குரல்  கொடுத்தார்.

"சேது!"

"ஸார்!" என்றார் சேது.
நீங்க போய் இந்த வீட்டு ஓனர் கிட்ட விசாரிங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

சரி,ஸார் என்றார் சேது.

சேது,பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் இந்த அடுக்குமாடிக் குடிருப்பின் ஓனர் எங்கு இருக்கிறார் என்று கேட்டார்.

அவர், இந்த குடிருப்பில் இல்லை. அவருக்கு அண்ணா நகரில் வேறு ஒரு வீடு சொந்தமாக இருக்கு,அவர் அங்க தான் இருப்பாரு என்றார்.

சேது,அவரிடம் குடிருப்பு ஓனர் போன் நம்பர் வாங்கி அழைத்து பார்க்க,யாரும் அதற்கு பதில் அழிக்கவில்லை.

சரி, அவர் விலாசம் இருக்கா எனக்  கேட்டார்.

விலாசத்தை எழுதிக்  கொடுத்தான் அவன்.

ஸார்,அவரது விலாசம் கிடைத்துவிட்டது. போன் எடுக்கல என்றார் சேது.

போரென்சிக் டிபார்ட்மென்ட் ஆய்வு முடித்ததும்,ரிசல்ட் நாளை தெரியவரும் என்று சொல்லிவிட்டு,அவள் கையில் இரத்த கறையில் இருந்த கத்தியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். 

பிறகு,அவள் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவள் அறைக்குள் இருந்த ஒரு ஓவியம்,ஒரு டைரி,ஒரு பையும் எடுத்து கொண்டு வெளிய வந்தனர்.

"சேது, ஜீப்பை ரெடி பண்ணுங்க இந்த வீட்டு ஓனர போய் பாக்கலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

போகும் பாதி வழியிலே ஒரு ஆம்புலன்ஸ் எதிர்முனையில் போனதைச் சுதாரித்தார் இன்ஸ்பெக்டர்.அடுக்கு மாடிக்குடியிருப்பின் ஓனர் வீடு பூட்டிக்கிடந்தது.பக்கத்து வீட்டில் விசாரித்தார் கான்ஸ்டபிள், அவருக்கு மாரடைப்பு ஏற்படுதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள் என சொன்னனர்.

சிறிது நேரத்தில்,அந்த வீட்டிற்கு பதட்டத்துடன் ஒருவர் வந்தார்.உடனே, அவரிடம் ரகு அப்பாவுக்கு என்னாச்சி என பக்கத்து வீட்டுக்காரர் விசாரிக்க,

அவன், அழுதுக்  கொண்டே சொன்னான் 
"அப்பா இறந்துவிட்டாரென்று".

வருத்தத்தோடு, உங்களை பாக்க போலீஸ் வந்து இருக்கிறது என்றார்  பக்கத்து வீட்டுக்காரர்.

சொல்லுங்க ஸார், "எதுக்கு வந்து இருக்கீங்க" என்றான் ரகு.

நடந்தை சொன்னார் இன்ஸ்பெக்டர். இருங்க ஸார், வரேன் என்று சொல்லிட்டு வீட்டுக்குள் போனான். கையில் ஒரு நோட்டோடு வந்தான்.

ஸார், இதுல தான் எல்லாம் இருக்கும் பாத்துக்கோங்க. நான் ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கிறன் என்று கையில் வேறொரு பையை எடுத்துக் கொண்டு வண்டியில் புறப்பட்டான்.

இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் செல்லும் வழியில் அவளது டைரியை படிக்க தொடங்கினார். சிறிது நேரத்தில்,

"சேது" என குரல் கொடுத்தார்.

இத பாருங்க அங்க நடந்தது எல்லாம் டைரில எழுத்திற்கு என்றார் இன்ஸ்பெக்டர்.

ஸார், இங்க பாருங்க அங்க  நடந்தது எல்லாம் இந்த ஓவியத்துல இருக்கு என்றார் சேது.

வாங்கி பார்த்த இன்ஸ்பெக்டர், சற்று அதிர்ச்சி அடைந்தார்.

ஸார், 
"இது தற்கொலையா இல்ல ஆவி வேலையா "
என்றார் சேது.






போரென்சிக் டிபார்ட்மென்ட் ரிசல்ட் வரும் வரை காத்து இருபோம்......... 
   

  









Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........