Skip to main content

vithi payanoo...



"விதி பயனா இல்ல முட்டாள் தனமா" 


     ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான்.
தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.

           ரவி மருந்து கடைக்கு சென்றான்.

          இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.
          
          சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.

         அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.

          சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு 
வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை 
எடுத்து சென்றான் ரவி.

         பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.

               சரி அப்பா, என்றான் ரவி.

               என்னோட  சட்டையை எடு, என்றார் ரவியின் தந்தை.
                 
               சட்டையை  எடுத்து கொடுத்தான் ரவி.

     ரவியின் அம்மா உடனே, நாளைக்கு என்னுமோ "ஊரடங்கு உத்தரவாம்"  கடையலாம் இருக்காதாம் வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கணும் என்றாள்.

     என்கிட்ட சில்லரை இல்லை, இந்தாடா ரவி என்று இரண்டு இரண்டாயிரம் நோட்டை கொடுத்தார் ரவியின் அப்பா.

               ரவி, வீட்டில் இருந்து கிளம்பினான்.

               ரவி, பணம் பரிவர்த்தனை செய்யும் கடைக்கு சென்று கோபி
மாமாவுக்கு இரண்டாயிரம் அனுப்பினான். பிறகு மளிகை கடைக்கு சென்றான். கடையில் வழக்கத்திற்கு அதிகமான கூட்டமாக இருந்தது. அம்மா சொன்ன அனைத்தும் பொருட்களையும் வாங்கி கொண்டு,மொத்தம் 324 என்றார் கடைக்காரர். இரண்டாயிரம் தாளை நீட்டினான் ரவி, கடைக்காரர் வாங்கி கொண்டு  முதலில் 500 ரூபாய்க்கு கணக்கு வரும்படி சில்லரை கொடுத்தார்,பின்னர் 15 நூரு ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

    ஒன்றுக்கு இரு முறையை எண்ணி சரிபார்த்து கொண்டு பாக்கெட்டில் வைத்து கொண்டு வண்டியில் வீட்டுக்கு திருப்பினான்.
பாதி வழியில் ரவி என்ற குரல், உடனே வண்டியை நிறுத்தி பார்த்தான். அட சோமு,   எப்படி டா இருக்க என்றான் ரவி. இரண்டு நிமிடம் சோமுவிடம் பேசி விட்டு வீடு திருப்பினான் ரவி.

    மளிகை சாமானை வீட்டில் வைத்த ரவி, மீதம் பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுக்க, 500 ரூபாய்க்கு கணக்கிட்டு கொடுத்த பாக்கி மட்டுமே இருந்தது பதறினான் ரவி. உடனே வண்டியில் புறப்பட்டான் ரவி, வந்த இடம் எல்லாம் தேடினான், மளிகை கடையிலும் தேடினான் பணம் கிடைக்கவில்லை. மனம் பதட்டம் அடைய அவனுக்கு என செய்வது என்று தெறியாமல் நின்றான். யோசித்தான் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்று..........

                     அப்பாவிடம் பணம் வாங்கியது முதல் வீட்டிற்கு திரும்பியது வரை மனத் திரையில் படம் ஓடினான்.எங்கு  விழுந்ததென்று அறியாமல் நின்றான்  சாலை யோரத்தில்.......



யோசிக்க யோசிக்க.....

               என்னடா இது நேற்று கிடைத்த நூறு ரூபாய்க்கு இன்னக்கி 1500 ரா போச்சே......என வருந்தினான்.

          இது என "விதி பயனா இல்ல முட்டாள் தனமா" என்றும் புரியாமல் வீட்டிற்கு வருத்தத்துடன் திருப்பினான் ரவி💔💔💔💔.

             

   
                











              

Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........